குற்றால அருவியில் குளிக்க மறுத்த நடிகர் ஜெய்!

நடிகர் ஜெய் குறித்த சுவாரஸ்ய சம்பவத்தை பகிர்ந்துகொண்டு இருக்கிறார் ஊடகவியலாளர் அந்தணன்.

“குற்றாலத்தில், “அர்ஜுனன் காதலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. ஜெய்தான் ஹீரோ.  அவர்  மழையில் நனைவது போல ஒரு ஷாட் எடுக்க வேண்டும். குற்றால அருவியின் தண்ணீரை குழாய் வழியாக இழுத்து ஒரு செயற்கை மழையை உண்டு செய்தார்கள்.

ஆனால் ஜெய், “நான் பல படங்களில் நடித்து வருகிறேன். குற்றாலத் தண்ணீரில் நனைந்தால் சளி பிடித்துவிடும். படங்களில் நடிக்க முடியாது” என மறுத்தார்.

இதனால், படக்குழுவினர் வேறு ஒரு ஏற்பாட்டை செய்து மழைக்காட்சியை எடுத்தார்கள்..” என்று சுவாரஸ்யமான சம்பவத்தைப் பகிர்ந்துகொண்டார் அந்தணன்.