Wednesday, November 6, 2024

முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஜீ ஜி ஸ்டூடியோஸ் & ட்ரம் ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் முத்தையா இயக்கத்தில், நடிகர் ஆர்யா நடிப்பில் கிராமத்து கதையாக உருவாகும் புதிய திரைப்படம் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்.’

குடும்பத்துடன் ரசிக்கும்படியான, வெற்றிகரமான கமர்ஷியல் படங்களை வழங்கும் இயக்குநர் முத்தையா இப்படத்தினை இயக்குகிறார். இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இதுவரையிலும் மாடர்ன் இளைஞராக ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகர் ஆர்யா, முதல் முறையாக இப்படத்தில் கரடு முரடான தோற்றத்தில் கிராமத்து மனிதனாக நடிக்கிறார்.

கடந்த டிசம்பர் 10-ம் தேதி, ஆர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. முதல்முறையாக கிராமத்து லுக்கில் ஆர்யா நடிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் பரபரப்பை கிளப்பியது.

இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாட்ஷா போஸ்டர் பின்னணியில் இருக்க, கருப்பு வேட்டி சட்டையில், தாடியுடன் கரடுமுரடான கிராமத்து லுக்கில் அசத்துகிறார் ஆர்யா. இந்த ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடம் படத்தின் மீது பெரும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

மேலும் தனது பிறந்த நாளை முன்னிட்டு படப்பிடிப்பு நடைபெறும் பகுதிகளில் இருக்கும் அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவ, மாணவிகள் 10 பேரை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ஆர்யா சைக்கிள் வழங்கினார்.

மேலும் படக் குழுவினர், கிராமத்து மக்களுடனும், பள்ளி மாணவர்களுடனும் இணைந்து, ஆர்யா பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினர். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கிய ஆர்யாவையும், படக் குழுவினரையும் அனைத்து தரப்பினரும் பாராட்டியுள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவில்பட்டி பகுதிகளில் வெகுவேகமாக நடந்து வருகிறது.

- Advertisement -

Read more

Local News