சன் பிக்சர்ஸ்-விஜய் கூட்டணியில் இருந்து விலகிவிட்டாலும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சும்மா இல்லை.
இயக்கத்தில் ஈடுபடவில்லையென்றாலும், தற்போது தயாரிப்பில் முனைப்பு காட்டுகிறாராம்.
ஏற்கெனவே ஏ.ஆர்.முருகதாஸ் ‘எங்கேயும் எப்போதும்’, ‘வத்திக்குச்சி’, ‘ராஜாராணி’, ‘மான் கராத்தே’, ‘பத்து எண்றதுக்குள்ள’ ஆகிய படங்களை சில தயாரிப்பு நிறுவனங்களோடு இணைந்து தயாரித்தார்.
இப்போதும் அதுபோலவே சில திரைப்படங்களைத் தயாரிக்க முனைந்திருக்கிறார். இதற்காக ஒரு மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து ஒரே நேரத்தில் மூன்று படங்களைத் தயாரிக்கவிருக்கிறாராம்.
இந்த மூன்று படங்களையும் ‘மான் கராத்தே’, ‘கெத்து’ ஆகிய படங்களை இயக்கிய திருக்குமரன், ‘ரங்கூன்’ படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி, ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’, ‘போக்கிரி ராஜா’, ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ ஆகிய படங்களை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா ஆகியோர் இயக்கவுள்ளதாக கோடம்பாக்கத்தில் பரபரப்பாக செய்திகள் ஓடுகின்றன.