மலையாள சினிமாவில் துல்கர் சல்மான் தயாரிப்பில் உருவாகி, டொமினிக் அருண் இயக்கிய ‘லோகா சாப்டர் 1’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியானது. இதில் ‘கள்ளியங்காட்டு நீலி’ என்ற கதாபாத்திரத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருந்தார். இப்படம் மலையாள திரையுலகில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பாக்ஸ் ஆபீஸில் 300 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

இதனை தொடர்ந்து, ‘லோகா’ படத்தின் அடுத்தடுத்த பாகங்களையும் தயாரிக்கப் போவதாக துல்கர் சல்மான் அறிவித்துள்ளார். இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில், வரவிருக்கும் ஒரு பாகத்தில் என் தந்தை மம்முட்டியும் நடிக்கிறார். அது நாங்கள் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘லோகா’ படத்தின் முதல் பாகத்திற்கு கிடைத்த பெரும் வரவேற்பை முன்னிட்டு, அடுத்தடுத்த பாகங்களை இன்னும் பெரிய அளவில், அதிக பட்ஜெட்டில் உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றும் துல்கர் சல்மான் உற்சாகமாக கூறியுள்ளார்.

