‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் வெற்றிக்கு பிறகு, இயக்குநர் ராஜமவுலி தற்போது மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் உள்ளிட்ட பலரும் நடிக்கும் பெயரிடப்படாத ஒரு பிரம்மாண்டமான படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு நவம்பர் 15ஆம் தேதி ஐதராபாத்தில் நடைபெறும் விழாவில் வெளியிடப்பட உள்ளது.

இதுகுறித்து சமீபத்தில் தனது எக்ஸ் பக்கத்தில் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார் ராஜமவுலி. அதில், “மூன்று பேருடனும் செட்-ல் க்ளைமாக்ஸ் காட்சி படமாக்கும் போது, GlobeTrotter நிகழ்ச்சியைச் சுற்றி இன்னும் பல தயாரிப்புகள் நடக்கின்றன, ஏனெனில் நாங்கள் இதுவரை முயற்சி செய்யாத அளவுக்கு பெரிய ஒன்றை செய்கிறோம். நவம்பர் 15 அன்று அதை நீங்கள் அனுபவிக்க காத்திருக்கிறேன். அதற்கு முன்னதாக உங்கள் வாரத்தை சில புதுமையான விஷயங்களால் நிரப்புகிறோம். இன்று முதலில் பிரித்வியின் லுக், என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது இப்படத்தில் பிரித்விராஜ் கும்பா என்ற கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் அவருடைய கதாபாத்திர போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

