மணிரத்னம் இயக்கத்தில் கடைசியாக கமல், சிம்பு, திரிஷா உள்ளிட்டோர் நடித்து வெளியான ‘தக் லைப்’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

இயக்குனர் மணிரத்னம் அடுத்ததாக இளைஞர்களை கவரும் வகையில் ஒரு காதல் படத்தை இயக்க போகிறார். இதில் துருவ் விக்ரம் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் , தற்போது ஒரு கதையை விஜய் சேதுபதியிடம் சொல்லி மணிரத்னம் ஓகே வாங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.. ஏற்கனவே மணிரத்னத்தின் ‛செக்க சிவந்த வானம்’ படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மேலும், இந்த படத்தில் கதாநாயகியாக தற்போது டிரெண்ட்டிங்கில் உள்ள ருக்மிணி வசந்த்தை நடிக்க வைக்க பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

