ராமாயண கதையை அடிப்படையாகக் கொண்டு, ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், சைப் அலிகான், கிரித்தி சனோன் உள்ளிட்ட பலர் நடித்த படம் ஆதிபுருஷ். இந்த திரைப்படம் 2023ஆம் ஆண்டு வெளியாகியது. சுமார் 500 கோடிக்கு மேல் செலவில் உருவாகி, ‘மோஷன் கேப்சரிங்’ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டு இருந்தாலும், படம் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானது. இதனால் எதிர்பார்க்கப்பட்ட வரவேற்பு மற்றும் வசூலை எட்ட முடியவில்லை.

இந்த நிலையில், அந்தப் படத்தில் ராவணனாக நடித்த சைப் அலிகான் சமீபத்தில் அளித்த பேட்டியில், “என் மகன் தைமூர், அந்த படத்தை பார்த்தவுடன் என்னை பார்த்தான். அப்போது நான், ‘மன்னித்துவிடு’ என்றேன். அதற்கு அவன் ‘பரவாயில்லை’ என்று பதிலளித்தான்,” என்று கூறினார்.
இதனால் ரசிகர்கள் சமூக வலைதளங்களில், சைப் அலிகானை கடுமையாக கிண்டல் செய்து விமர்சித்தனர். இது தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைக்கு விளக்கம் அளித்த சைப் அலிகான், “நான் வில்லனாக நடித்திருப்பது என் மகனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதனால்தான் அவனிடம் மன்னிப்பு கேட்டேன். அடுத்த முறை ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று அவன் சொன்னான். ஆனால் நான் நடித்த எல்லா படங்களையும் மற்றும் ஆதிபுருஷ் நான் நேசிக்கிறேன் எனத் தெரிவித்தார்.