மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் நீண்ட கால இடைவெளிக்கு பிறகு உருவாகிய திரைப்படம் ‘தக் லைப்’. இதில் சிலம்பரசன், அசோக் செல்வன், திரிஷா, ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கு முன்னர், இந்த படத்தில் கமல் மற்றும் சிம்பு இருவரும் அப்பா-மகன் உறவை பிரதிபலிக்கும் கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக தகவல்கள் வந்திருந்தன.
தற்போது கிடைத்த புதிய தகவலின்படி, கமல் மற்றும் சிம்பு நேரடியாக சட்டை பிடித்து சண்டையிடும் ஒரு முக்கியமான காட்சி இப்படத்தில் இடம்பெற்றுள்ளது என்று கூறப்படுகிறது.