விஜய் நடித்துள்ள ‘சச்சின்’ திரைப்படம் அவரது நடிப்பில் திரைக்கு வந்த படமாகும். இந்தப் படத்தை ஜான் மகேந்திரன் இயக்கியிருந்தார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜெனிலியா நடித்திருந்தார்.
அவர்களுடன் பிபாஷா பாசு, வடிவேலு, சந்தானம், ரகுவரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இப்படம் வெளியான போது கோடிகளில் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், 20 ஆண்டுகள் கழித்து, நேற்று ‘சச்சின்’ திரைப்படம் மறுபடியும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இப்படம் நேற்று மீண்டும் வெளியான முதல் நாளில் உலகளவில் ரூ.1.9 கோடி வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.