Touring Talkies
100% Cinema

Friday, April 18, 2025

Touring Talkies

நடிகர் அர்ஜூனின் இளைய மகளுக்கு விரைவில் டூம் டூம் டூம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் அர்ஜூனின் மூத்த மகளான ஐஸ்வர்யா, திரைப்பட உலகில் நடிகையாக அறிமுகமானவர். தற்போது அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவர், நடிகர் தம்பி ராமையாவின் மகனான உமாபதியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் அவர் தனது நடிப்பு பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

அர்ஜுனின் இளைய மகளான அஞ்சனாவுக்கு சினிமாவை விட வியாபாரத்தில் அதிக ஆர்வம் உள்ளது. அவர் ஹேண்ட்பேக் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தை இயக்கி வருகிறார். தொழில் தொடர்பாக அறிமுகமான இத்தாலியைச் சேர்ந்த காதலரை திருமணம் செய்ய உள்ளார். இவர்கள் கடந்த 13 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், இருவரின் குடும்பத்தினரும் இந்த உறவை அறிவதாகவும் கூறப்படுகிறது.

தற்போது இத்தாலியில் இவர்களின் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது. இதில் நெருங்கிய குடும்பத்தினரும், தோழர்களும் மட்டும் கலந்து கொண்டனர். அந்த நிச்சயதார்த்த நிகழ்வின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன. இவை குறித்து அஞ்சனா தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களுடன் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். ஆனால், மாப்பிள்ளையின் பெயரை அவர் வெளியிடாமல் வைத்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News