ரஜினிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்தின் தயாரிப்பில், நோவா ஆப்ரஹாம் இயக்கத்தில் அசோக் செல்வன், சத்யராஜ், ரித்திகா சிங், நாசர், நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ள வெப் தொடர் ‘கேங்ஸ் – குருதிபுனல்’ என்ற பெயரில் எடுக்க திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த தொடர் 1970ஆம் ஆண்டுகளின் பின்னணியில் உருவாக்கப்பட்ட கேங்ஸ்டர் தழுவல் கொண்டதாகும். இதை அமேசான் ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டது.
ஆனால் தற்போது, இந்த வெப் தொடருக்கான பட்ஜெட் எதிர்பார்த்ததைவிட பல மடங்கு அதிகமாகச் செலவானதாலும், இதுவரை 70 சதவீதம் படப்பிடிப்பு மட்டுமே முடிந்துள்ளதாலும், தயாரிப்பாளர் தற்காலிகமாக இந்தத் திட்டத்தை நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.