மதுரையில் நடைபெற்று வரும் மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் இயக்குநர்கள் வெற்றிமாறன், சமுத்திரக்கனி மற்றும் ஞானவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அந்த நேரத்தில், கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனை சந்தித்த சமுத்திரக்கனி மற்றும் ஞானவேல் அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.
இதன் பிறகு, மாநாட்டு மேடையில் வைக்கப்பட்டிருந்த கார்ல் மார்க்ஸ் சிலையுடன் இயக்குநர்கள் சமுத்திரக்கனி மற்றும் வெற்றிமாறன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.இந்த புகைப்படங்களை மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது எக்ஸ் (முன்னைய ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.