Touring Talkies
100% Cinema

Tuesday, May 13, 2025

Touring Talkies

இரண்டு நாட்களில் 100 கோடி… தூள் கிளப்பிய எம்புரான் பட வசூல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மோகன்லால் நடிப்பில், மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘லூசிபர்’. இந்தப் படத்தின் மூலம் பிருத்விராஜ் இயக்குநராக அறிமுகமானார். தற்போது, இதன் இரண்டாம் பாகமாக ‘எல் 2 எம்புரான்’ வெளியாகியுள்ளது.

இதில் மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த 27ஆம் தேதி வெளியான இப்படம், வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.  

இப்படம் முதல் நாளில் ரூ.22 கோடி வசூலித்தது. இந்நிலையில், 48 மணி நேரத்தில், அதாவது 2 நாட்களில் ரூ.100 கோடி வசூலித்ததாக படக்குழு அறிவித்துள்ளது. இதன் மூலம், மிக விரைவாக ரூ.100 கோடி வசூல் செய்த மலையாளப் படம் என்ற புதிய சாதனையை ‘எல் 2 எம்புரான்’ படைத்துள்ளது. மோகன்லால் நடிப்பில், பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 27ஆம் தேதி வெளியான படம் ‘எல் 2: எம்புரான்’. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது.

- Advertisement -

Read more

Local News