நடிகர்களுக்குப் போலவே, நடிகைகளுக்கும் அல்லது ஆண் திரை கலைஞர்களுக்கு நிகராகப் பெண் திரை கலைஞர்களுக்கும் சமமான சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையாகவலுப்பெற்று வருகிறது. இந்த கருத்தை நடிகை சமந்தா ஒரு தயாரிப்பாளராக முன்னெடுத்து செயல்படுத்தியுள்ளார்.

சமீபத்தில், சமந்தா திரலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் ஒரு படத்தை இயக்குனர் நந்தினி ரெட்டி இயக்க உள்ளார். இது, இவர்கள் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படமாகும். இப்படத்தில் கதாநாயகியாக சமந்தாவே நடிக்கவிருக்கிறார். மேலும், பாலின பாகுபாடு இன்றி சமமான சம்பளம் வழங்கப்படும் என சமந்தா உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பாக இயக்குனர் நந்தினி ரெட்டி கூறுகையில், “நடிகை சமந்தா தயாரிப்பாளராக பாலின பாகுபாடில்லாமல் சம்பளம் வழங்குவதாக அறிவித்துள்ளார். இதில் பணியாற்றும் ஆண் கலைஞர்களுக்கு என்ன சம்பளம் வழங்கப்படுகிறதோ, அதே அளவு சம்பளம் பெண் கலைஞர்களுக்கும் வழங்கப்படும். இந்திய சினிமாவில் இதுவரை யாரும் இப்படிப் பட்ட முயற்சியை மேற்கொள்ளவில்லை” என்றார்.