அசாம் மாநிலம் தேஜ்பூரை சேர்ந்தவர் கயடு லோஹர். இவர் 2021 ஆம் ஆண்டு, மனோரஞ்சன் நடிப்பில் வெளியான கன்னட திரைப்படம் முகில்பேட்டை மூலம் நடிகையாக திரையுலகில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து, 2022 ஆம் ஆண்டு ஸ்ரீ விஷ்ணு நடிப்பில் வெளியான அல்லூரி படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் நுழைந்தார். அதன் பிறகு, ஒரு மராத்தி மற்றும் மலையாள திரைப்படத்திலும் நடித்துள்ளார். இருப்பினும், இவரின் பெயர் பெரிதாக அறிமுகமாகவில்லை.

இந்நிலையில், தற்போது தமிழில், இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக டிராகன் திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் மூலம், அவர் தமிழ்ப் பேசும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார். குறிப்பாக, இளைஞர்களின் பிடிக்கும்படி அவரின் நடிப்பு மற்றும் தோற்றம் அமைந்துள்ளதால், பலரின் “க்ரஷ்” ஆக மாறியுள்ளார்.டிராகன் படத்திற்குப் பிறகு, அவர் மீண்டும் தமிழில் இதயம் முரளி திரைப்படத்தில் அதர்வாவுடன் இணைந்து நடிக்கிறார். சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி ரசிகர்களை கவரும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார், அவரின் ரசிகர் வட்டமும் நாளுக்கு நாள் பெரிதாகி வருகிறது.