காக்கா முட்டை, விசாரணை, வட சென்னை உள்ளிட்ட பல விருது பெற்ற திரைப்படங்களை தயாரித்த இயக்குநர் வெற்றிமாறன், தனது கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மூலம் புதிய திரைப்படம் ஒன்றை உருவாக்கியுள்ளார். அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் தலைப்பு பேட் கேர்ள்.

அஞ்சலி, ரம்யா உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் டீசர் வெளியானதிலிருந்து பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.

இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில், பிரபல இயக்குநர் ஆர்.கே. செல்வமணி பேட் கேர்ள் படத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “குக்கரில் சாதம் பொங்கும்போது, ஓரிரு அரிசிகள் வெளியே வரலாம். அதனால் சாதம் வேகவில்லை என்று முடிவு செய்து விட முடியுமா? அதுபோல, ஒரு திரைப்படத்தை முழுமையாக பார்க்காமல், அது சரியா? தவறா? என கருத்து கூறுவது அரைவேக்காட்டுத்தனம்”, என்று குறிப்பிட்டுள்ளார்.