Wednesday, February 12, 2025

இது எஸ்.பி.பி ரசிகர்களுக்கு கிடைத்த அங்கீகாரம்… எஸ்.பி.பி சரண் நெகிழ்ச்சி பேட்டி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்தியத் திரைப்பட உலகின் அடையாளமாகத் திகழ்ந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். 2020ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி, கொரோனா பெருந்தொற்றின் காரணமாக அவர் உயிரிழந்தது, கோடிக்கணக்கான ரசிகர்களை பேரதிர்ச்சிக்கும் ஆழ்ந்த துயரத்திற்கும் உள்ளாக்கியது. தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும்—பெரிய நகரங்கள், சிறிய நகரங்கள், கிராமங்கள் என எங்கு பார்த்தாலும் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிலையில், எஸ்.பி. பாலசுப்ரமணியம் பெயரில் ஒரு சாலை திறக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, அவரது மகன் எஸ்.பி.பி. சரண் பேசும்போது, “இது எங்கள் குடும்பத்திற்குக் கிடைத்த அங்கீகாரம்” என்று கூறாமல், “அவரது ரசிகர்களுக்குக் கிடைத்த அங்கீகாரம்” என தெரிவித்துள்ளார். “அப்பாவிற்காக நினைவிடம் ஒன்றை கட்டி வருகிறோம். அந்த இடத்தில் அவருடைய புகைப்படங்கள், வென்ற விருதுகள் உள்ளிட்ட அனைத்தையும் பார்க்கலாம். இது அவருடைய ரசிகர்களுக்காகவே செய்யப்படும் ஒரு நினைவுச்சின்னம். இது எங்கள் குடும்பத்தின் உரிமை அல்ல, ரசிகர்களின் அன்பால் உருவாகும் ஒரு நினைவிடம். எஸ்.பி.பியின் பாடல்களை விரும்பாதவர்கள் எவரும் இருக்கமுடியாது. அவருடைய பாடல்களை அனைத்து கட்சித் தொண்டர்களும் நேசிப்பார்கள்” என்று அவர் உருக்கமாக கூறினார்.

மேலும், “இந்த சாலைக்கு அப்பாவின் பெயர் வைக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதுவே அவர் தினமும் நடைப்பயிற்சி மேற்கொண்ட வழி. நாங்கள் கிரிக்கெட் விளையாடியபோது, மாடியில் இருந்து அம்பயர் போல நின்று கவனித்திருக்கிறார். கால்வாய் அடைத்துக்கொண்டால், நானும் அப்பாவும் சேர்ந்து அதை சுத்தம் செய்திருக்கிறோம். இந்த பகுதி அவருக்கு மிகவும் பிடித்தது. இது பாதுகாப்பான பகுதியாக இருந்ததால், எங்கும் செல்லாமல் இங்கேயே இருக்க விரும்பினோம்” என, தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

Read more

Local News