Wednesday, January 15, 2025

அனுஷ்காவின் ‘காதி’ படத்தில் நடிக்கும் விக்ரம் பிரபு… வெளியான அறிவிப்பால் சர்ப்ரைஸ் ஆன ரசிகர்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் “இறுகப்பற்று” படத்தின் வெற்றிக்குப் பிறகு, விக்ரம் பிரபு அடுத்ததாக சண்முகப்பிரியன் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இதே நேரத்தில், தெலுங்கில் கிரிஷ் இயக்கத்தில் அனுஷ்கா முக்கிய கதாபாத்திரமாக நடிக்கும் “காதி” என்ற படத்திலும் விக்ரம் பிரபு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இன்று விக்ரம் பிரபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, “காதி” படத்தில் அவர் நடித்துள்ள டெசி ராஜு என்ற கதாபாத்திரத்தின் முதல் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த படம் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியீட்டு நேரத்திலேயே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. தற்போது, இப்படத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ளார் என தகவல் வெளியாகி, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News