பிரபல பாலிவுட் நடிகை ரிதி டோக்ரா கடந்த 2021-ம் ஆண்டு வெளியான தி மேரிட் வுமன் வெப் தொடரில் நடித்திருந்தார். அதே வருடம் மும்பை டைரீஸ் என்ற வெப் தொடரிலும் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார்.
தற்போது, ரிதி டோக்ரா தனது கதாபாத்திரங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதற்கமைய, ஷாருக்கானின் ஜவான் மற்றும் விக்ராந்த் மாஸ்ஸியின் தி சபர்மதி ரிப்போர்ட் போன்ற படங்களில் வலுவான துணை கதாபாத்திரங்களில் நடித்தார்.
இந்த ஆண்டு முடிவடைய இருக்கும் நிலையில், தனது அனுபவங்களை பகிர்ந்து நடிகை ரிதி டோக்ரா கூறியதாவது, இந்த வருடத்தை திரும்பிப் பார்க்கும் போது, உண்மையிலேயே சிறப்பாக இருக்கிறது. இது எனக்கு ஒரு சிறந்த ஆண்டாக இருந்தது. என் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும், நான் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட்டேன். இந்த ஆண்டு எனக்கு சுவாரஸ்யமான அனுபவங்களை வழங்கியது,” என்றுள்ளார்.