நடிகர் சூர்யா தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ எனும் படத்தில் நடித்துக் கொண்டுள்ளார். இந்த படத்தின் வேலைகள் முடிவடைந்த நிலையில், அவரது அடுத்த படம் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகும் 45வது படமாகும், இதில் தற்போது நடித்து வருகிறார். மேலும், அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் படத்திலும் நடிக்கவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, வாத்தி மற்றும் லக்கி பாஸ்கர் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். கடந்த சில வாரங்களாக, இதற்கான பேச்சுவார்த்தையை சித்தாரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனர் நாகவம்சி நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இப்போது, இந்த புதிய படத்தில் சூர்யா நடிப்பது உறுதியாகியுள்ளது. இப்படத்தின் கதை இந்தியாவில் முதல் இன்ஜின் உருவாக்கப்பட்ட வரலாற்றை மையமாகக் கொண்டிருப்பதால், இப்படத்திற்கு ‘760 சிசி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.