Touring Talkies
100% Cinema

Saturday, October 4, 2025

Touring Talkies

அமரன் பட ராணுவ உடையில் வந்து தனது மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நடிகர் சிவகார்த்திகேயன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘அமரன்’ திரைப்படம் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி வெளியானது. இதுவரை மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தின் மொத்த வசூல் தற்போது 250 கோடியை தாண்டியுள்ள நிலையில், படம் அரங்கம் நிறைந்த காட்சிகளாக தொடர்ந்து பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில், சிவகார்த்திகேயன் தன் மனைவி ஆர்த்திக்கு முகுந்த் வரதராஜன் கெட்டப்பில் சென்று அவரை பயமுறுத்திய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

நேற்று, அவரது மனைவி ஆர்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, ராணுவ உடையில் அவர் சர்ப்ரைஸ் கொடுத்து, பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News