திருச்சிற்றம்பலம் படத்திற்காக தேசிய விருதை பெற்ற நடிகை நித்யா மேனன், தேசிய விருது பெற்ற பிறகு ஒரு ஊடகத்திற்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது, “தேசிய விருதுக்கு காரணம் முன் தயாரிப்புகள் இல்லை. கதாபாத்திரத்தைப் புரிந்து கொள்வது மற்றும் இயற்கையாக நடிப்பதுதான்.
முதல்முறையாக தேசிய விருது பெற்றதால் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். இதுவரை நடித்து வந்ததற்கான அதிகாரப்பூர்வ அங்கீகாரமாகவே நான் இதைக் கருதுகிறேன். ஒரு கலைஞராக இந்த விருது எனக்கு மிக முக்கியமானது. இந்த விருதினை என் படக்குழுவிற்கே சமர்ப்பிக்கிறேன்.
மேலும், நான் தற்போது பல படங்களில் நடித்து வருகிறேன். அடுத்ததாக மீண்டும் தனுஷ் உடன் நடிக்க உள்ளேன். தனுஷ் உடன் நடித்த இப்படத்துக்கு தேசிய விருது கிடைத்தது. எனவே, அடுத்த படத்தையும் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்” என்றார். சமீபத்தில் தனது பெயரை நித்யா மேனன் என்று குறிப்பிடாமால், நித்யா மெனன் என்று பயன்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.