Monday, November 18, 2024

சரித்திர கதையில் நடிக்கும் தனுஷ்.‌.‌‌. மாரி செல்வராஜ் போட்ட அடுத்த ப்ளான்..

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை போன்ற புகழ்பெற்ற படங்களை இயக்கியவர் மாரி செல்வராஜ். தற்போது, துருவ் விக்ரம் நடிப்பில் பைசன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் கபடி விளையாட்டை மையமாகக் கொண்ட கதையில் உருவாகி வருகிறது.

இந்த நிலையில், ஒரு பேட்டியில் மாரி செல்வராஜ், அடுத்ததாக தனுஷுடன் ஒரு படத்தில் இணைவதாகவும், அந்த படம் சரித்திர பின்னணியுடன் பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து பேசிய அவர், இது என் கனவுப் படம், அந்த படத்தை இயக்கி வெளியிடுவதற்கு நேரம் அதிகம் தேவைப்படும் பைசன் படத்திற்கு பின்னர் இதற்கான வேலைகள் ஆரம்பமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News