Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

ஒரு வழியாக போராடி யு/ஏ சான்றிதழ் பெற்ற எமர்ஜென்சி திரைப்படம்? #EMERGENCY Movie

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘எமர்ஜென்சி’. இந்த படத்தில் இந்திரா காந்தியாக கங்கனா ரனாவத் நடித்துள்ளார், மேலும் படத்தை அவரே இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க, திரைக்கதை மற்றும் வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார்.

கடந்த ஆண்டே இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்திருந்த நிலையில், சில காரணங்களுக்காக படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிவைக்கப்பட்டது. பின்னர், 6-ஆம் தேதி படம் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்தது. ஆனால், மீண்டும் சில காரணங்களால் வெளியீட்டு தேதி மேலும் தள்ளிச் செல்லப்பட்டது.

இதற்கு முக்கியமான காரணம், சீக்கிய சமூகத்தினரை தவறாக சித்தரித்துள்ளதாக எழுந்த சர்ச்சை. இதன் விளைவாக, படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாமல் இருந்தது. மேலும், குறிப்பிட்ட சமூகத்தினரின் உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ள காட்சிகளை நீக்குவதற்காக சென்சார் போர்டு உத்தரவிட்டது. இந்த நிலையில், தற்போது இப்படத்திற்கு தணிக்கை குழுவால் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதுவே, படத்தின் புதிய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News