விஜய்சேதுபதி நடிப்பில் நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளிவந்த மகாராஜா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மகாராஜா படம் குறித்து நிதிலன் சுவாமிநாதன் முன்னதாக புரமோஷன்களின்போதும் படத்தின் ரிலீசை தொடர்ந்தும் பல பேட்டிகளில் பகிர்ந்து வந்துள்ளார். இந்நிலையில் நம்முடைய டூரிங் டாக்கீஸ்-ன் யூட்யூப் சேனலின் பிரபல நிகழ்ச்சியான சாய் வித் சித்ரா நிகழ்ச்சியிலும் பங்கேற்ற நிதிலன் சாமிநாதன் படம் குறித்து பல சுவாரசியங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். மூன்று பாகங்களாக இவரது பேட்டி அடுத்தடுத்து சில தினங்கள் இடைவெளியில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது வெளியான அவரது பேட்டிகள் ஏராளமான ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்தப் படத்தில் ஒவ்வொரு நடிகர் குறித்தும் தன்னுடைய ஆச்சரியத்தை பகிர்ந்து வருகிறார் நிதிலன் சாமிநாதன். நடிகர் விஜய் சேதுபதி படத்தில் ஒரு சமையல் காட்சியில் நடித்திருந்ததாகவும்… மேலும் இயக்குனர் நிதிலன் சுவாமிநாதன் பகிர்ந்துகொண்ட சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்ள கீழேயுள்ள யூட்யூப் வீடியோக்களை கண்டு மகிழுங்கள்!