பிரபு தேவா 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடன இயக்குனராகவும், பல ஹிட் திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல நிறமை கொண்ட கலைஞராக விளங்கி வரும் பிரபுதேவாவுக்கு இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்ற பட்டமும் உண்டு.
இவரை சிறப்பிக்கும் விதமாக பிரபுதேவாவின் 100 பாடல்களுக்கு 100 நிமிடம் தொடர்ந்து நடனமாடும் உலக சாதனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, கடைசி நேரத்தில் பிரபு தேவா வராததால் சொதப்பலில் முடிந்துள்ளது.
நம்ம மாஸ்டர் நம்ம முன்னாடி என்கிற பெயரில், பி.எஸ் ராக்ஸ் என்கிற அமைப்பு, சர்வதேச நடன தினத்தில், நடிகர் தேவாவின் 100 பாடல்களுக்கு 100 நிமிடங்களில் நடனமாடும் நிகழ்ச்சி சென்னை ராஜரத்னம் ஸ்டேடியத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இதில் ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள், நடன இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சி அதிகாலை 6 மணிக்கு தொடங்கி 7.30 மணிக்குள் முடிவடையும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இதற்காக மாணவர்கள் காலை 5 மணிக்கே நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்துவிட்டார்கள். 9 மணி ஆகியும் நிகழ்ச்சிக்கு பிரபு தேவா வராததால், நிகழ்ச்சி தொடங்கப்படமால் சொதப்பலில் முடிந்தது.
இந்நிலையில் தன்னால் வரமுடியாததற்கு மனமுருகி மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரபு தேவா.அந்த வீடியோவில், என்னால் வர முடியாமல் போனதற்கு மன்னித்து விடுங்கள், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறுவர்கள் முதல் பெரியவர்கள் என அனைத்து கலைஞர்கள், நடன இயக்குனர்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், அங்கு வந்திருந்த பெற்றோர்கள் என அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள் உங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் நிச்சயமாக ஏதாவது ஒரு விதத்தில் நிச்சயம் உங்களை சந்திப்பேன் என்று கூறியுள்ளார்.