தலைவர் 171 படம் குறித்து சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார் லோகேஷ். அப்போது “இந்தப் படத்தில் கஞ்சா, போதை பொருட்கள் பின்னணியில் இருக்காது எனக் கூறியுள்ளார்.
லோகேஷின் மாநகரம் முதல் லியோ வரை, அவர் இயக்கியுள்ள 5 படங்களிலும் போதை பொருட்களான கஞ்சா, அபின் போன்றவையும் முக்கியமான பங்கு வகித்துள்ளன.
அதாவது கஞ்சா, போதைப் பொருட்கள் கடத்தும் வில்லன்களை அழிக்க லோகேஷின் ஹீரோ போராடுவார். போதைப் பொருட்கள் இல்லா இளைய சமூகம் உருவாக வேண்டும், அதனால் தான் அதன் பாதிப்புகள் குறித்து படங்கள் எடுப்பதாக லோகேஷ் கூறியிருந்தார்.
ஆனால், லோகேஷின் இந்த ஸ்டேட்மெண்ட் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. பேருக்கு ட்ரக் ஃப்ரீ சோஷைட்டி என சொல்லிவிட்டு, படம் முழுக்க கஞ்சா, போதைப் பொருட்களுடன் ரத்தம் தெறிக்க தெறிக்க ஆக்ஷன் காட்சிகள் வைப்பது தான் லோகேஷின் வழக்கம். இதுதான் லோகேஷ் படங்களின் வெற்றிக்கு காரணம் என விமர்சனங்கள் வந்தன. இதனால் லோகேஷ் கனகராஜ் திருந்திவிட்டாரோ என்னவோ? தலைவர் 171 போதைப் பொருட்கள் பின்னணியில் உருவாகவில்லை என லோகேஷ் ஓபனாக பேசியுள்ளார். ஆனால் ஆக்ஷனுக்கு பஞ்சமே இருக்காது எனவும் லோகேஷ் அப்டேட் கொடுத்துள்ளார். இதனால் லோகேஷ் சினிமாட்டிக் வரலாற்றில் முதன்முறையாக கஞ்சா, போதைப் பொருட்கள் இல்லாமல் தலைவர் 171 உருவாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.