விக்ரம் வேதா 2017 ஆம் ஆண்டு வெளியான ஒரு வெற்றிப்படமாகும். புஷ்கர் மற்றும் காயத்ரி இயக்கித்தில் குற்றம், திகில் திரைப்படமாக ரசிகர்களின் பாராட்டை பெற்றது. மாதவன் மற்றும் விஜய் சேதுபதி முன்னணி பாத்திரங்களில் நடித்திருந்தனர். சாரதா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர் மற்றும் ஜான் விஜய் ஆகியோர் துணைக் கதாப்பாத்திரங்களாக நடித்தனர். வை நாட் ஸ்டூடியோஸ் இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஓர் தாதாவாகவும் அவரை பிடிக்க நினைக்கும் காவல் துறை அதிகாரியாக மாதவன் நடித்திருந்தார்.
இந்த படத்தை ரிலீஸ் செய்ய பயந்தேன்! இந்த படம் ஓடுமா? என்ற சந்தேகத்துடன் தான் வெளியிட்டேன் ஆனால் அது மிகப் பெரிய வெற்றியை கொடுத்தது. என்று பிரபல டூரிங் டாக்கீஸ் சேனலில் விநியோகஸ்தர் ரவீந்திரன் பகிர்ந்து கொண்டார்.