Wednesday, November 20, 2024

திருமணம் வேண்டாம்…! ஆனால் துணை வேண்டும்!:  நடிகை ஹனி ரோஸ்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை ஹனி ரோஸ். 2005 ஆம் ஆண்டு 14 வயதில் பாய் பிரண்ட் என்ற படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து  பல படங்களில் நடித்து பிரபலமானார்.

தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவுடன் வீரசிம்ம ரெட்டியில் நடித்து இந்தியா முழுதும் அறிந்த நடிகையானார்.

தற்போது அவர், தனது திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

“திருமணம் செய்துகொள்வது  பிரச்சனையான ஒன்று.  என் காதலை பலரிடம் சொல்லியிருக்கிறேன். பள்ளியில் படிக்கும் போது இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்து உள்ளன.  ஆனால் காதல் வெற்றிபெறவில்லை. எனக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை. சிறுவயதில் இருந்தே எனக்கு அந்த ஆசை இல்லை ஆனால் எனக்கென்று ஒரு துணையை தேடிக்கொள்வேன்” என கூறினார்.

- Advertisement -

Read more

Local News