Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

என்னது.. டி.ஆர். வேடத்தில் ரஜினி நடிக்க இருந்தாரா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ரஜினி – டி.ஆர். இருவருமே ரசிகர்களின் ஆதரவைப் பெற்றவர்கள் என்றாலும் நடிப்பு பாணியில் வேறு வேறு துருவங்கள் என்றே சொல்லலாம்.

ஆனால் ரஜினி நடிக்க வேண்டிய வேடத்தில் டி.ஆர். நடித்தார் என்றால் நம்ப முடிகிறதா.. ஆனால் இது உண்மைதான்.

Touring talkies  யுடியுப் சேனலில் நடிகரும், பத்திரிகையாளருமான சித்ரா லட்சுமணன் இந்தத் தகவலை தெரிவித்தார்.

அவர், “1983 ஆம் ஆண்டு டி.ராஜேந்தர் இயக்கி நடித்து வெளியான  “ஊயிருள்ளவரை உஷா” திரைப்படத்தில் சரிதா, கங்கா, நளினி  உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.

இப்படத்தில் நாயகனா ரஜினிகாந்த்தை நடிக்க வைக்க வேண்டும் என்றுதான் முதலில் டி.ராஜேந்தர் விரும்பினார். இது குறித்து ரஜினிகாந்த்தை அணுகியபோது அவரும் இத்திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் ஏதோ காரணத்தால் ரஜினிகாந்த்தால் நடிக்க முடியாமல் போனது. 

அதன் பிறகுதான் டி.ராஜேந்தர் அத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார்.  அத்திரைப்படத்தில் டி.ராஜேந்தர் பேசும் வசனங்கள் எல்லாம் ரஜினிகாந்த்துக்கான பஞ்ச் டயலாக் சாயலிலேயே இருக்கும். காரணம் அவை, ரஜினிகாந்த்துக்காக எழுதப்பட்ட வசனங்க!” என்றார் சித்ரா லட்சுமணன்.

இது போன்ற மேலும் பல சுவராஸ்யமான சினிமா தகவல்களை அறிய..  touring talkies  யு டியுப் சேனலை பாருங்கள்..

- Advertisement -

Read more

Local News