சாப்பாட்டுக்காக, நடிகர் கமல் அடம்பிடித்த சம்பவததை இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
“கமல் அறிமுகமான படம் களத்தூர் கண்ணம்மா. அப்போது அவர் சிறுவன். அந்த படத்தில் ஒரு காட்சியில், ஆசிரியராக வரும் சாவித்திரி, சாப்பிட்டுக்கொண்டு இருப்பார். வெளியில், சிறுவன் கமல் பசியை போக்குவதற்காக தண்ணீர் பம்பில் தண்ணீர் குடித்துக் கொண்டிருப்பார். அதை பார்த்த சாவித்ரி வெளியே வந்து, “ஏன் சாப்பிடலயா ?” என்று கேட்பார்.
அதற்கு கமல், “நான் அனாதை இல்லத்தில் வசிக்கிறேன். காலை இரவு மட்டும் தான் சாப்பாடு. மதிய நேரத்தில் இங்கு வந்து தண்ணீர் குடித்து பசியை போக்கிவிடுவேன்” என்று கூறுவார். உடனே சாவித்ரி தான் வைத்திருந்த உப்புமாவை ஊட்டிவிடுவார்.
கமலும் சாப்பிட வேண்டும்.

ஆனால் கமல் சாப்பிட மறுத்துவிட்டார்.. “மாந்தோப்பு என்று சொல்லி அழைத்துப் போனீர்கள்.. அங்கே மாம்பழங்களுக்கு பதிலாக பொம்மைகளை தொங்கவிட்டிருந்தீர்கள், இங்கு வந்து பார்த்தால் வீடுக்கு பதிலாக சேலைகளை தொங்கவிட்டு செட் போட்டு வைத்துள்ளீர்கள், இப்பொழுது உப்புமாவை காட்டி சாப்பிடு என்றால் எப்படி சாப்பிட முடியும்? அதுவும் ஒருவேளை மண்ணாக இருந்தால் ?” என கூறினார்.
பிறகு, நான் அந்த உப்புமாவை சாப்பிட்டு காட்ட.. அதன் பிறகே கமல் சாப்பிட்டார்.. கமல் அடம் பிடித்ததால் கொஞ்ச நேரம் படப்பிடிப்பு நின்றது.” என்றார் எஸ்.பி. முத்துராாமன்.