mgr hurt about sivajis photos that it drawn by actor pandu
நகைச்சுவை நடிகர் பாண்டு ஓவியம் வரைவதில் வல்லவர். தீவிர எம்.ஜி.ஆர். ரசிகர்.
சமீபத்திய பேட்டி ஒன்றில இவர், “ஒரு சமயம் சின்ன சின்ன 100 சிவாஜி படங்களை கொண்டு ஒரு எம்ஜிஆர் படத்தை வரைந்து 100 சிவாஜி = 1 எம்ஜிஆர் என்ற தலைப்பில் வரைந்தேன். அது ஒரு பத்திரிகையில் வெளியானது.
அன்று காலையே எம்.ஜி.ஆரிடமிருந்து அழைப்பு வந்தது. ‘நாம் வரைந்த படத்தை பார்த்துவிட்டு பாராட்ட கூப்பிடுகிறார்’ என்று சந்தோசமாகச் சென்றேன்.
அவரோ, என்னை கடுமையாக திட்டினார். ‘நடிகர்களுக்குள் என்று இல்லை.. எந்தத் துறையிலும் போட்டி இருக்கும். இருக்க வேண்டும். ஆனால் அது காழ்ப்புணர்ச்சி ஆகிவிடக்கூடாது. இனி இப்படி செய்யாதே’ என அறிவுறுத்தி அனுப்பினார்! எம்.ஜி.ஆர். என்றால் எம்.ஜி.ஆர்தான்!” என்று தனது நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டார் பாண்டு.