சுசீந்திரன் இயக்கத்தில் விஷால். லட்சுமி மேனன் நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளியான படம் ‘பாண்டியநாடு’ திரைப்படம். இந்த படத்தில் நடிகர் சூரி, இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றினர்.
இந்த படம் குறித்து சுசீந்திரன் சமீபத்தில் அளித்த பேட்டியில், “இந்த படத்தில் பாரதிராஜாவை எப்படியாவது நடிக்க வைக்க வேண்டும் என நினஐத்தேன். அவரிடம் கதையைச் சொல்ல, பிடித்துப் போய் நடிக்க ஒப்புக்கொண்டார்.
ஆனால் படப்பிடிப்பு துவங்கிய சில நாட்களில் அவர் இறுக்கமாக இருந்தார். கேட்டதும், ‘நிறைய வசனங்கள் இருக்கும் என நினைத்து வந்தேன். சும்மாவே உட்கார வைச்சிருக்கீங்க. இனி இந்த படத்தில் நடிக்க மாட்டேன்’ என்றார்.
பிறகு அவரை சமாதானப்படுத்தி நடிக்க வைத்தேன். படத்தின் க்ளைமாக்ஸ் பாரதிராஜாவோடு தான் முடிவடையும். படம் பார்த்த அனைவரும் பாரதிராஜாவின் நடிப்பை வெகுவாக பாராட்டினர். அதன் பிறகுதான் அவர், ‘சரியாதாதான்யா என்னை பயன்படுத்தி இருக்கே..’ என்று பாராட்டினார்” என்றார் சுசீந்திரன்.