Thursday, November 21, 2024

மம்மூட்டிக்கு ஜோடியாக நடிக்கும் ஜோதிகா..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை ஜோதிகா முதன்முறையாக மலையாள சூப்பர் ஸ்டாரான மம்மூட்டிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

இந்தப் புதிய படத்தை Mammootty Kampany மற்றும் Wayfarer Films ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. படத்திற்கு காதல் – தி கோர் என பெயரிட்டுள்ளனர்.

இந்தப் படத்தினை மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன The Great Indian Kitchen’ படத்தினை இயக்கிய இயக்குநரான Jeo Baby இயக்கவுள்ளார்.

இந்தப் படத்தில் நடிகை ஜோதிகா ஹீரோயினாக நடிக்கவுள்ளார். இவர் முதல் முறையாக மம்மூட்டியுடன் ஜோடி சேருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் அறிவிப்பு போஸ்டரை ஜோதிகாவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று வெளியிட்டுள்ளனர்.

நடிகர் மம்மூட்டியும் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்தச் செய்தியை வெளியிட்ட கையோடு ஜோதிகாவுக்கு பிறந்த நாள் வாழ்த்தையும் சொல்லியிருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News