மறைந்த நடிகர் எம்.ஆர். ராதா முற்போக்காளராகவே வாழ்ந்தார் என்பதை அனைவரும் அறிவோம். இவர் எல்லோரையும் சமமாக நினைக்கும் மனதுடையவர்.
திரைவாய்ப்பு கிடைப்பதற்கு முன் ஒரு நாள் வீட்டில் நடந்த சம்பவம்..
ராதாவும் அவரது அண்ணனும் சாப்பிட்டுக்கொண்டு இருக்க, அவர்களது தாயார் பரிமாறிக்கொண்டு இருந்தார். அப்போது அண்ணனுக்கு ஒரு மீன் கூடுதலாக வைத்தார்.
“அவனுக்கு மட்டும் ஏன் கூடுதலாக வைக்கிறாய்” என ராதா கேட்டிருக்கிறார். அதற்கு தாயார், “அண்ணன் சம்பாதிக்கிறான்” என சொல்லி இருக்கிறார். இந்த பதிலை கேட்ட ராதா, ஆவேசத்துடன் வெளியேறினார்.
பிறகு மிக சிரமப்பட்டு திரையுலகில் கொடி நாட்டினார். அந்த அளவுக்கு மனதில் உறுதி ஏற்பட்டதற்கு காரணம், அவரது அம்மாவின் அன்றைய செயல்தானாம். இதை ராதாவே கூறியிருக்கிறார்.