Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

மாஸ் கமர்ஷியல் திரைப்படமாக உருவாகும் ‘சர்தார்’

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழின் முன்னணி நட்சத்திரமான நடிகர் கார்த்தி, பிரபல இயக்குநர் P.S.மித்ரனுடன் முதன்முறையாக இணையும் திரைப்படம் ‘சர்தார்.’

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் S.லக்ஷ்மன்குமார் இந்த சர்தார்’ படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் இரு வேடங்களில் கார்த்தி நடிக்கிறார். கார்த்தி ஜோடியாக ராஷிகண்ணா நடிக்கிறார். மேலும் சிம்ரன் ஜங்கி ஃபாண்டே, ரஜிஷா விஜயன், முரளி ஷர்மா, முனீஷ்காந்த் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இசை – ஜி.வி.பிரகாஷ் குமார், ஒளிப்பதிவு – ஜார்ஜ் C.வில்லியம்ஸ், படத் தொகுப்பு – ரூபன், கலை இயக்கம் – கதிர், எழுத்து – எம்.ஆர்.பொன்பார்த்திபன், ரோஜி, பிபின் ரகு, சண்டை இயக்கம் – திலீப் சுப்பராயன், ஆடை வடிவமைப்பு – பிரவீன் ராஜா D, பாடல்கள் – யுகபாரதி, VFX – ஹரிஹர சுதன், நிர்வாக தயாரிப்பு- J.கிரிநாதன், தயாரிப்பு மேற்பார்வை-AP.பால்பாண்டி, புகைப்படங்கள் – ஜி.ஆனந்த்குமார், விளம்பர வடிவமைப்பு – சிவகுமார்.S, நிர்வாக தயாரிப்பு – கிருபாகரன் ராமசாமி, மக்கள் தொடர்பு – ஜான்சன்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் நடைபெற்று வருகிறது.

சென்னைய தொடர்ந்து கொடைக்கானல் காட்டுப் பகுதிகளிலும், மைசூர் காட்டுப் பகுதியிலும் படப்பிடிப்பு நடக்கவுள்ளது.

இந்தப் படத்திற்கான சண்டை காட்சிகளை பிரம்மாண்டமான அளவில் படமாக்க ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் திட்டமிட்டுள்ளார்.

சமீபத்தில் வெளியான கார்த்தியின் தோற்றம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறிய நிலையில், படம் முடிவடையும் முன்னதாகவே படத்தின் டிஜிட்டல் உரிமையை ஆஹா’ நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News