Touring Talkies
100% Cinema

Friday, March 14, 2025

Touring Talkies

பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் ஹீரோவாகிறார்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சென்ற வருட பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரன்னராக வெற்றி பெற்ற பாலாஜி முருகதாஸூம் தமிழ்ச் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பல போட்டியாளர்கள் இந்நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் புகழ் வெளிச்சத்தை பயன்படுத்தி சினிமாவிலும் நடித்து வருகிறார்கள்.

பிக்பாஸ் மூலம் பிரபலமான ஹரீஷ் கல்யாண், ஆரவ், கவின், முகின், ரைசா வில்சன், ரம்யா பாண்டியன் ஆகியோர் தமிழ் சினிமாக்களில் நடித்து வருகின்றனர்.

இப்போது இந்த வரிசையில் பிக்பாஸ் 4-வது சீசனில் ரன்னராக வந்த மாடல் அழகர் பாலாஜி முருகதாஸ், தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.

அவர் நடிக்க உள்ள படத்தை லிப்ரா புரடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரன் தயாரிக்க உள்ளார். 

- Advertisement -

Read more

Local News