Touring Talkies
100% Cinema

Sunday, May 18, 2025

Touring Talkies

காடுகள் பற்றிய கதைகளைச் சொல்ல வரும் ‘வீரப்பனின் கஜானா’ திரைப்படம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

காடுகளின் பெருமையை நகைச்சுவை கலந்து கூறும் வகையில் உருவாகியிருக்கிறது ‘வீரப்பனின் கஜானா’ திரைப்படம்.

ஃபோர் ஸ்கொயர்ஸ் ஸ்டுடியோஸ் பிரபாதீஸ் ஷாம்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

படத்தில் யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், ராஜேஷ், தேவா, பூஜா, ஜீவிதா என யூத் காம்போவே நடித்துள்ளது.

ராட்சசி’ படத்தின் இயக்குநரான கௌதம்ராஜ் மற்றும் பிரபாதீஸ் ஷாம்ஸ் இருவரும் சேர்ந்து இந்தப் படத்தின் கதையை எழுதியிருக்கிறார்கள்.

புதுமுக இயக்குநர் யாசின் இந்தப் படத்தை இயக்குகிறார்.

இந்தப் படம் பற்றி இயக்குநர் யாசின் பேசுகையில், “காட்டிற்கும், மனிதனுக்கும் பிரிக்க முடியாத ஒரு பந்தம் இருக்கிறது. ஆதி மனிதன் காட்டில்தான் வாழ்ந்தான். பிறகு நாகரிகம் வளர்ச்சியடைந்து கிராமம், நகரம் என்று மாறியது.

இருப்பினும் காட்டின் மீது அனைவருக்கும் எப்போதும் ஒரு மோகம் இருந்துக் கொண்டே இருக்கும். குறிப்பாக குழந்தைளுக்கு காடு பற்றிய ஆர்வமும் கற்பனையும் அதிகம் உண்டு. காடுகளைப் பற்றி கேட்கவும் காட்சிகளாக பார்க்கவும் உற்சாகமாகிவிடுவார்கள்.

அந்தக் காட்டின் பெருமையை பேன்டஸி, காமெடி, த்ரில்லர் கலந்து என்டர்டெயின்மென்டுக்கு பஞ்சம் வைக்காமல் பேசும் திரைப்படம்தான் இந்த ‘வீரப்பனின் கஜானா’.

மேலும், தமிழ்நாட்டில் காடு என்றால் ஞாபகம் வருவது சத்தியமங்கலமும், வீரப்பனும்தான். ஆகையால், அதை மையமாக கொண்டு இத்திரைப்படம் உருவாகி வருகிறது.

காட்டின் காவலனான வீரப்பன் சம்பந்தமான காட்சிகள் படத்தில் முக்கியமானதாக இருக்கும். குரங்கு, புலி, யானை என படம் முழுவதும் சுவாரஸ்யங்கள் நிறைந்திருக்கிறது. இது குழந்தைகள் முதல் அனைவரும் குதூகளித்து பார்க்கக் கூடிய படமாக இருக்கும்..” என்றார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தென்காசி, குற்றாலம், நாகர்கோவில் காட்டுப் பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

மேலும், இந்த வீரப்பனின் கஜானா’ திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டுள்ளார்கள்.

- Advertisement -

Read more

Local News