Friday, November 22, 2024

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டில் இருந்து புதிய ஹீரோ வருகிறார்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிப்புக்கென்றே பிறந்து இந்தியாவுக்கே பெருமை சேர்த்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் குடும்பமே, கலைக் குடும்பமாகத்தான் இப்போதுவரையிலும் இருந்து வருகிறது.

சிவாஜிக்குப் பிறகு அவரது மகன்களான ராம்குமாரும், பிரபுவும் நடிக்க வந்தார்கள். இவர்களில் நடிகர் பிரபு இதுவரையிலும் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துவிட்டார். 1985-களின் நாயகர்களின் ஒருவராக வெற்றிகரமாக வலம் வந்தவர் நடிகர் பிரபு.

ராம்குமார் அறுவடை நாள்’, ‘மை டியர் மார்த்தாண்டன்’, ‘சந்திரமுகி’, ‘ஐ’, ‘எல்.கே.ஜி.’, ‘பூமராங்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். மேலும், ‘கலைஞன்’, ‘சந்திரமுகி’, ‘அசல்’ ஆகிய படங்களை தயாரித்திருக்கிறார்.

இதன் பின்பு மூன்றாவது தலைமுறையில் ராம்குமாரின் மூத்த மகனான துஷ்யந்த் சக்ஸஸ்’, ‘மச்சி’ ஆகிய திரைப்படங்களில் நாயகனாக நடித்திருந்தார். ஆனால், அதன் பின்பு அவர் நடிக்க வராமல் ஒதுங்கி தற்போது படத் தயாரிப்பாளராக உள்ளார்.

ராம்குமாரின் இரண்டாவது மனைவி மீனாட்சியின் மகனான சிவாஜிதேவ், ‘சிங்கக்குட்டி’, ‘புதுமுகங்கள் தேவை’, ‘இதுவும் கடந்து போகும்’ ஆகிய படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார்.

இப்போது ராம்குமாரின் இளைய மகன்களில் ஒருவரான தர்ஷனும் நடிக்க வருகிறாராம்.

தர்ஷன் தன் தாத்தா போல் சிறுவயது முதலே, கலை ஆர்வம் அதிகம் உள்ள நபர். தன் தாத்தா மேல் பெரும் மதிப்பு கொண்டிருக்கும் தர்ஷன் நடிப்பை முறையாகக் கற்றுக் கொண்டு நடிப்பிற்காக முழுமையாக தன்னை செதுக்கிக் கொண்டுள்ளார்.

தனது கல்லூரி காலம் தொடங்கி, தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக மேடை நாடகங்களில் பங்காற்றி வருகிறார். டெல்லியில் உள்ள நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா-வில் உள்ள பேராசிரியர்களின் கீழ் பயிற்சி பெற்று வருகிறார்.

தர்ஷன் பல்வேறுவிதமான நாடக முறைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். சபா நாடகம், தெருக் கூத்து, வீதி நாடகக் குழு, நாட்டுப்புற நாடகம், தனி நடிப்பு மற்றும் சமூக நாடகம் போன்ற செயல்பாடுகளை மும்பை, புனே மற்றும் சென்னை உட்பட இந்தியா முழுதும் பல பகுதிகளில் நிகழ்த்தியுள்ளார்.

இந்தியா முழுவதும் பயணம் செய்து ஹிந்தி மற்றும் தமிழ் மொழிகளில் தானே நாடக நிகழ்ச்சிகளை வடிவமைத்து நடத்தியுள்ளார். இந்தியாவில் எந்த ஒரு வாரிசு நடிகரும் செய்யாத சாதனையாக தெருக்கூத்து, வீதி நாடக குழு ஆகியவற்றில் பணிபுரிந்து சாதனை படைத்திருக்கிறார் தர்ஷன்.

வாரணாசி மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இவர் நடித்து, இயக்கிய ராவி பார்’ என்ற நாடகம் விமர்சன ரீதியில் பெரும் பாராட்டுக்களை பெற்றுள்ளது. தன் தாத்தாவின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், தன்னை முழுதாக நடிப்பிற்கு ஒப்புக் கொடுத்து அதன் தாத்பர்யங்கள் அனைத்தையும் கற்றுணர்ந்திருக்கும் தர்ஷன் அடுத்ததாக திரை உலகில் நுழைய தயாராகி வருகிறார்.

தர்ஷன் நாயகனாக நடிக்கவுள்ள புதிய படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது. நடிகர் திலகம் வீட்டிலிருந்து மற்றுமொரு பொக்கிஷம் தமிழ் சினிமாவிற்கு கிடைக்கவுள்ளது.

- Advertisement -

Read more

Local News