Touring Talkies
100% Cinema

Sunday, May 18, 2025

Touring Talkies

‘பிக்பாஸ்-4’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் பெற்ற சம்பளம் எவ்வளவு..?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நேற்றைக்கு முடிவடைந்த விஜய் டிவியின் பிக்பாஸ் சீஸன்-4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளம் எவ்வளவாக இருக்கும் என்ற கேள்வி அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவர்களின் மனதில் எழுந்து கொண்டேயிருக்கிறது.

இதற்கான விடையை சம்பந்தப்பட்ட டிவி நிறுவனமும், கலந்து கொண்டவர்களும் மட்டுமேதான் சொல்ல முடியும். ஆனால், அதற்கு முழுமையாக வாய்ப்பில்லை என்றாலும் இணையத்தில் இது பற்றி செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது.

இதன்படி பிக்பாஸ் சீஸன்-4-ல் கலந்து கொண்டவர்கள் வாங்கியதாகச் சொல்லப்படும் சம்பளப் பட்டியல் இதுதான் :

ரேகா : ரூ.1 லட்சம் x 14 = 14 லட்சம்

சனம் ஷெட்டி : ரூ.1 லட்சம் x 63 = 63 லட்சம்

ஆரி : ரூ.85,000 x 105 + 50 லட்சம் = 1 கோடியே 35 லட்சத்து 25 ஆயிரம்

சுசித்ரா : ரூ.80,000 x 49 = 39.20 லட்சம்

அர்ச்சனா : ரூ.75,000 x 77 = 57.75 லட்சம்

ரம்யா பாண்டியன் : ரூ.75,000 x 105 = 78.75 லட்சம்

கேப்ரில்லா : ரூ.70,000 x 102 + 5 லட்சம் = 76.40 லட்சம்

ஷிவானி : ரூ.60,000 x 98 = 58.80 லட்சம்

ரமேஷ் : ரூ.60,000 x 69 = 41.40 லட்சம்

வேல்முருகன் : ரூ.50,000 x 28 = 14 லட்சம்

நிஷா : ரூ.40,000 x 70 = 28 லட்சம்

சம்யுக்தா : ரூ.40,000 x 56 = 22.40 லட்சம்

அனிதா சம்பத்: ரூ.40,000 x 84 = 33.60 லட்சம்


ரியோ : ரூ.35,000 x 105 = 36.75 லட்சம்

ஆஜித் : ரூ.15,000 x 91 = 13.65 லட்சம்

சுரேஷ் : ரூ.10,000 x 35 = 3.50 லட்சம்

சோம் : ரூ.10,000 x 105 = 10.50 லட்சம்

பாலா : ரூ.10,000 x 105 = 10.50 லட்சம்

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்ற 106 நாட்களும் உள்ளேயிருந்து இறுதிப் போட்டியில் முதலிடத்தைப் பெற்ற நடிகர் ஆரி மிக அதிகச் சம்பளத்தையும், இரண்டாமிடத்தைப் பெற்ற பாலாஜி மிகவும் குறைவான சம்பளத்தையும் பெற்றிருக்கிறார்கள் மிகப் பெரிதான முரணாக இருக்கிறது..!

- Advertisement -

Read more

Local News