Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

“பா.ரஞ்சித் படங்களில் நடிக்க மாட்டேன்…” – நடிகர் எஸ்.வி.சேகரின் கோபப் பேச்சு..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

“இயக்குநர் பா.ரஞ்சித்தின் சாதி பற்றிய கண்ணோட்டத்தாலும், தன் குடும்பத்தைப் பற்றி அவர் செய்த விமர்சனத்தாலும் அவர் படங்களில் நடிக்க அழைப்பு கொடுத்தாலும் நடிக்க மாட்டேன்…” என்று கூறியிருக்கிறார் நடிகர் எஸ்.வி.சேகர்.

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “பா.ரஞ்சித்தின் சாதி பற்றிய கண்ணோட்டமும், எப்போது பார்த்தாலும் ஆதிக்க சாதி என்று அவர் சொல்வதெல்லாம் எனக்குப் பிடிக்காது.

ஒரு குறும் படத்தில் எஸ்.வி.சேகர் மாதிரி மாமனார் வேண்டும் என்று சொன்னது.. அந்தக் குறும்படத்தில் மருமகள் கேரக்டருக்கு என் மருமகளின் பெயரை வைத்தது இதெல்லாம் அநாகரிகமான செயல். அப்பதான் நான் சொன்னேன்.. ‘என் வீட்டுல நாய்க்கு நான்தான் தினமும் சோறு வைக்குறேன். அதுக்கு ரஞ்சித்துன்னு பேர் வைச்சிருக்கிறேன்’னு.

நேரில் பார்த்தால் ‘வணக்கம்’ சொல்றது வேறு. அதென்ன ஒருவரை நேரில் பார்த்தவுடன் ஆக்ரோஷமாக பேசுவது போலவும், செய்வது போலவும் நான் என்ன தப்பு செஞ்சேன்..? என் கம்யூனிட்டி என்ன தவறு செய்தது..?

வெள்ளைக்காரன் கண்டு பிடிச்ச கேமிரா, பிலிமை பயன்படுத்திக் கொண்டு ஜாதியைப் பத்தி பேசுறது அசிங்கமா இல்லையா.. ‘என் ஜாதி தாழ்த்தப்பட்ட ஜாதி’ன்னு நீ சொல்றதே தப்பு. ‘நான் பிறந்த ஜாதி உயர்ந்தது’ன்னு நீதான் சொல்லணும். அதான் நல்ல குவாலிட்டி.

நான் இதுவரையிலும் 43 தடவை ரத்த தானம் செஞ்சிருக்கேன். 200 உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறேன். பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கே ரத்தம் கொடுத்திருக்கேன். என் வீட்டில் வேலை செய்பவர்களும் வேறு, வேறு ஜாதிக்காரர்கள்தான்.

என்னிக்கோ, எங்கயோ 50 வருடங்களுக்கு முன்பாக நடந்ததையெல்லாம் இப்போது பேசுவது அசிங்கமாக இல்லையா..? அப்போ நம்ம மனசுல இருக்குற அழுக்கைக் கொட்டுற குப்பைத் தொட்டியா நம்ம சினிமா..?

ரஞ்சித் பெரிய இயக்குநராக இருக்கலாம். ரஜினியை வைச்சே படம் பண்ணிய இயக்குநராகவும் இருக்கலாம். ஆனால், அதற்காக அவருடைய படத்தில் நடிப்பதற்கு எனக்கு அவசியமே இல்லை…” என்கிறார் நடிகர் எஸ்.வி.சேகர்.

- Advertisement -

Read more

Local News