Touring Talkies
100% Cinema

Sunday, May 18, 2025

Touring Talkies

ஆர்.எம்.வீரப்பனுக்கு கால்ஷீட் கொடுக்க மறுத்த ரஜினி..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ்த் திரையுலகத்தில் இன்றைக்கும் உயிருடன் இருக்கும் மூத்தத் தயாரிப்பாளர்களில் ஒருவர் ஆர்.எம்.வீரப்பன்.

இவருக்கும், சூப்பர் ஸ்டார் ரஜினிக்குமான நட்பு உலகம் அறிந்தது. இவருடைய தயாரிப்பில் உருவான ‘பாட்ஷா’ படத்தின் விழாவில்தான் ரஜினி முதன்முதலாக வெளிப்படையாக அரசியல் பேசப் போய், அது தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தையே ஏற்படுத்தியது.

ரஜினி, ஆர்.எம்.வீரப்பன் அவர்களிடத்தில் இன்றைக்கும் மிகப் பெரிய அளவுக்கு மரியாதையாக பழகி வருகிறார். ஆனால், ‘துவக்கக் காலத்தில் அவருடைய படத்திற்கே கால்ஷீட் கொடுக்க முடியாது’ என்று மறுத்திருக்கிறார் என்னும் சுவையான செய்தி இப்போது வெளியாகியிருக்கிறது.

அப்போதைய காலக்கட்டத்தில் ரஜினியின் மிக நெருங்கிய நண்பராக இருந்த நடிகரும், இயக்குநருமான விஜய் கிருஷ்ணராஜ் இந்த விஷயத்தை இப்போது ஒரு யூ டியூப் சேனல் பேட்டியில் கூறியிருக்கிறார்.

விஜய் கிருஷ்ணராஜ் இது பற்றிப் பேசும்போது, “ரஜினி நல்ல பீக்கில் இருந்து வந்தபோது சத்யா மூவிஸில் ரஜினியை வைத்து ஒரு படம் தயாரிக்க முடிவு செய்தார்கள். இது பற்றி ரஜினியிடம் சொல்லி ஓகே வாங்கும்படி என்னிடம் சொல்லியிருந்தார்கள்.

நானும், ரஜினியும் அவரது ஆரம்பக் காலத்திலிருந்தே நண்பர்கள் என்பதால் நான் ரஜினியிடம் இது பற்றிப் பேசினேன். ஆனால் எடுத்த எடுப்பிலேயே, “நான் அரசியல்வாதிகளுக்குக் கால்ஷீட் கொடுக்கிறதில்லை” என்றார் ரஜினி. நான் அதற்கு மறுத்துப் பேசினேன். “இல்ல ஸார்.. ஆர்.எம்.வீ. ஸார் இப்போ மாநில அமைச்சராகவும் இருக்கிறார். அவர் படத்துல நீங்க நடிச்சீங்கன்னா எம்.ஜி.ஆருக்கும் உங்களுக்கும் இருக்குற சின்னச் சின்ன உரசல்கள்கூட சரியாயிரும். அவரே சரி பண்ணிருவாரு.. கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்க..” என்றார்.

ரஜினி அப்போதும் ‘ஓகே’ என்று சொல்லவில்லை. அந்த நேரத்தில் நான் ‘ஜானி’ படத்தின் கதை, திரைக்கதையிலும் மகேந்திரனுக்கு உதவியாக வேலை செய்து கொண்டிருந்தேன். ஒரு நாள் ‘ஜானி’ படத்தில் இடம் பெற்ற ‘காற்றில் எந்தன் கீதம்’ பாடல் காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் திடீரென்று என்னிடம் வந்த ரஜினி, ‘நான் ரெடி.. சத்யா மூவிஸுக்கு பண்ணலாம்’ என்றார். எனக்கு பெரிய மகிழ்ச்சி.

உடனேயே ஆர்.எம்.வீ. ஸாருக்கு போன் செய்து சொன்னேன். ‘நாளைக்கு அவரை வீட்டுக்குக் கூட்டிட்டு வா’ என்றார். மறுநாளே ரஜினியுடன் ஆர்.எம்.வீ.யை சந்திக்கச் சென்றோம்.

பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்து படம் செய்ய ஒத்துக் கொண்டார் ரஜினி. அந்தப் படம்தான் ‘ராணுவ வீரன்’..” என்றார் விஜய் கிருஷ்ணராஜ்.

- Advertisement -

Read more

Local News