Friday, November 22, 2024

மணிரத்னம் படத்தில் ஆனந்த்ராஜூக்கு வாய்ப்புக் கிடைக்காத காரணம்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் மணிரத்னம் தமிழில் இயக்கிய முதல் படமான ‘பகல் நிலவு’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போனதற்கு ஒரு வித்தியாசமான காரணத்தைச் சொல்கிறார் என்கிறார் நடிகர் ஆனந்த்ராஜ்.

இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சிக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில் இதைக் கூறியிருக்கிறார்.

அவர் இது பற்றிப் பேசும்போது, “நான் அடையாறு திரைப்படக் கல்லூரியில் படிப்பை முடித்தபோது, என்னுடைய நடிப்பு கோர்ஸ் டிபார்ட்மெண்ட்டில் நான்தான் முதலிடம் பெற்றேன்.. இதற்காக அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியிடம் இருந்து தங்கப் பதக்கத்தினையும் பரிசாகப் பெற்றேன்.

ஆனால், அப்போதே பலரும் “இங்கே தங்கப் பதக்கம் வாங்கியவர்கள் சினிமாவில் முன்னுக்கு வந்ததே இல்லை…” என்று சொன்னார்கள். இதைக் கேட்டு அப்போதே எனக்கு திக்கென்றாகிவிட்டது. சரி.. எப்படியாவது நாம் முன்னேறி அந்தப் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்துவிடலாம் என்று முடிவு செய்து வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்தேன்.

அப்போது ஆர்.எம்.வீரப்பன் ஸாரின் மகன் தமிழழகன் எனக்கு நண்பர். அவர் சொல்லி மணிரத்னத்தைப் பார்க்கப் போனேன். அப்போ அவர் பகல் நிலவு படத்தை இயக்குறதா இருந்தார்.

அதைக் கேள்விப்பட்டு பயங்கர சந்தோஷத்துடன் இயக்குநர் மணிரத்னத்தைப் பார்க்க ராயப்பேட்டேயில் இருந்த சத்யஜோதி பிலிம்ஸ் அலுவலகத்திற்குச் சென்றேன். நான் சென்ற பின்புதான் மணிரத்னம் தன்னுடைய ஜாவா பைக்கில் ஆபீஸுக்கு வந்தார்.

வந்த வேகத்தில் ஆபீஸில் இருந்த டேப்ரிக்கார்டரில் அந்தப் படத்தின் பாடல்களைத் திருப்பித் திருப்பிக் கேட்டுக் கொண்டேயிருந்தார். அதை முடித்துவிட்டு ப்ரீயானவுடன் நான் அவரைச் சந்திக்கச் சென்றேன்.

தமிழழகன் மணிரத்னத்துகிட்ட “என்னைக் காட்டி முரளிக்கு பிரெண்ட் கேரக்டரு்ககு நடிக்க வைக்கலாமே..” என்றார். என்னைப் பார்த்ததும் மணிரத்னம், “முரளிக்கு பிரெண்ட் கேரக்டராச்சே.. இவரை எப்படி..?” என்று யோசித்தார். பின்பு, “கேமிராமேனை கூப்பிடுங்க…” என்றார். அவர் வந்து என்னைப் பார்த்துவிட்டு.. “முரளி கருப்பு.. இவர் இவ்ளோ சிகப்பா இருக்காரு. எப்படி லைட்டிங் செய்யறது..” என்று கேட்டார். அன்றைக்குத்தான் எனக்கு என் மேலயே கோபம் வந்தது. ‘ஏண்டா இப்படி சிகப்பா பொறந்தோம்’ன்னு..!!!

இதுனாலேயே எனக்கு அந்த வாய்ப்பு பறி போனது. இருந்தாலும் அதே படத்துல ‘ஒரு போலீஸ் கேரக்டர் இருக்கு பண்றீங்களா..?’ன்னு கேட்டாங்க. ஏற்கெனவே பல பேர் சொல்லியிருந்தாங்க.. ‘முதல் படத்துலேயே போலீஸ் வேஷம் போட்ட.. அப்புறம் கடைசிவரைக்கும் போலீஸ் டிரெஸ்ஸுதான்’னு சொல்லியிருந்ததால.. ‘அது வேண்டாம்’ன்னு சொல்லிட்டேன்.

இப்படி நானே அந்தப் படத்துல மறுத்ததாலயோ என்னவோ… இப்போவரைக்கும் மணிரத்னம் ஸார் படத்துல நான் நடிக்கவே முடியலை..” என்றார் ஆனந்த்ராஜ்.

- Advertisement -

Read more

Local News