சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ரெட்ரோ’. இதில் பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையை சந்தோஷ் நாராயணன் அமைத்துள்ளார். இந்த படம் மே 1ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
படம் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கூறும்போது, ‘ரெட்ரோ’ என்பது ஒரு காலத்தை குறிக்கும் வார்த்தை என்று தெரிவித்தார். இந்த திரைப்படத்தின் கதை 1990களில் நடைபெறும் ஒரு காதல் கதை என்பதால் இந்த தலைப்பை தேர்வு செய்ததாக கூறினார். இது வழக்கமான என் கேங்ஸ்டர் படத்தைப் போல இல்லாமல், ஒரு அழகான காதல் திரைப்படமாக உருவாகியுள்ளது. அதில் ஆக்ஷனும் உள்ளது, சந்தோஷமான தருணங்களும் இடம்பெறுகின்றன.
படத்தில் சூர்யா “பாரிவேல் கண்ணன்” என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதை பல இடங்களில் நகரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால், அவர் பல தோற்றங்களில் திரையிலும் தோன்றுகிறார். கோபம், அடிதடி என குறிக்கோளின்றி வாழும் இளைஞனின் வாழ்க்கையில், ஒரு பெண் வந்ததும் அவனின் வாழ்நிலை மாற்றமடைவதும், அந்த பெண்ணுக்காக ஒரு சிக்கலைத் தீர்ப்பதும் கதையின் மையமாகும். பூஜா ஹெக்டே “ருக்மணி” எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பெரும்பாலான காட்சிகள் அந்தமான் தீவுகளில் எடுக்கப்பட்டுள்ளன. தினசரி பல மைல்கள் பயணம் செய்து படகு மூலம் தனித்த தீவில் படப்பிடிப்பு நடைபெற்றது. மேலும், ஒரு பகுதி வாரணாசியிலும் படமாக்கப்பட்டது. இந்த படம், என் மற்றும் சூர்யாவின் முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என கார்த்திக் கூறியுள்ளார்.