மலையாளத்தில் வெளியான திரைப்படம் மலையாளத்தில் மட்டுமின்றி தமிழ்நாட்டு ஏன் உலக அளவில் வசூலில் விமர்சன ரீதியாகவும் கொண்டாடப்பட்ட படம் தான் மஞ்சும்மல் பாய்ஸ்.இந்தாண்டு பிப்ரவரி மாதம் வெளியாகி உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இப்படத்தின் தயாரிப்பாளர் ஷான் ஆண்டனி, லாபத்தில் பங்கு கொடுக்கிறேன் என சொல்லி ஏமாற்றியதாக சிராஜ் என்பவர் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/04/Manjummel-Boys-e1702101636227-1024x512.jpg)
மலையாளத்தில் கொடிக்கட்டி பறந்த இப்படம் கேரளா மட்டுமில்லாது தமிழகத்திலும் பட்டைய கிளப்ப காரணமே குணா குகையும் அந்த கண்மணி அன்போடு காதலன் பாடல் தான். கொடைக்கானால் மலையை சுற்றி 11 நண்பர்களை வைத்து இயக்கிய இப்படம் சிறிய தூண்டில் போட்டு பெரிய மீனை பிடித்தார் போல பல கோடியை அள்ளியது.படம் வெளியான போது படத்தை பார்த்த கமல்ஹாசன் படக்குழுவினரை அழைத்து பாராட்டினார். இவரை தொடர்ந்து ரஜினிகாந்த் மற்றும் சிம்பு என பலரும் படக்குழுவினரை நேரில் பாராட்டினர்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/04/mj1.jpg)
இப்படத்தில் நண்பர்களுக்குள் இருக்கும் அற்புதமான காதலை அன்பை சொன்ன விதம் தனக்கு பிடித்து இருந்தது என்றும், இந்த படத்திற்கு பிறகு கண்மணி அன்போடு காதலன் பாடலின் மீதான கண்டோட்டமே மாறிவிட்டது என்று சிம்பு படக்குழுவினரை மனதார பாராட்டியிருந்தார்.இப்படம் மலையாள திரையுலகில் ரூ.200 கோடி கிளப்பில் இணைந்த முதல் படம் என்ற சாதனையை படைத்தது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/04/Manjummel-Boys-ott.jpg)
இவ்வாறு இருக்க இப்படத்தின் தயாரிப்பாளர் ஷான் ஆண்டனி இப்படத்தின் லாபத்தில் உனக்கு பங்கு தருகிறேன் என சொல்லி ஏமாற்றி விட்டதாக கேரளா அரூர் பகுதியைச் சேர்ந்த சிராஜ் என்பவர் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/04/mj2.jpg)
அந்த மனுவில் அவர் மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்காக ரூ.7 கோடியை முதலீடு செய்தேன். பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர் ஷான் ஆண்டனி லாபத்தில் 40 சதவீதம் பங்கு தருவதாக கூறினார் ஆனால் அவர் சொன்னபடி இதுவரை பணத்தை தரவில்லை.மேலும், நான் படத்திற்காக முதலீடு செய்த ரூ.7 கோடியையும் திருப்பி தரவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.இத்தகவல் திரையுலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.