“தன்னுடைய திரையுலகத் துவக்கக் காலத்தில் 6 படங்களுக்கு பூஜை போட்டு நின்று போனது” என்கிறார் தடையறத் தாக்க, கலகத் தலைவன் ஆகிய படங்களின் இயக்குநரான மகிழ் திருமேனி.
இது குறித்து பேசிய இயக்குநர் மகிழ் திருமேனி, “காக்க காக்க’ படத்துல நான் வொர்க் பண்ணிட்டிருக்கும்போது ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்துல இருந்து எனக்கு அட்வான்ஸே கொடுத்தாங்க. பட் சில காரணங்களால அதை என்னால பண்ண முடியலை. அதுக்கப்புறம் படம் பண்றதே மிகப் பெரிய போராட்டமா இருந்தது. ஒரு படம் பூஜை போட்டு டிராப் ஆச்சு. இன்னொரு படம் பத்து நாள் ஷூட்டிங் முடிஞ்சு டிராப் ஆச்சு. இந்த மாதிரி ஆறு புராஜெக்ட் டிராப் ஆச்சு.
இதையெல்லாம் தாண்டித்தான் ‘முன் தினம் பார்த்தனே’ பண்ணேன். அது ஓடவேயில்லை. பட் எனக்கு ரொம்பப் புடிச்ச படம் அது. அதை நிறைய நண்பர்களும் சொல்லும்போது எனக்கு மகிழ்ச்சியா இருக்கும். என்னோட முதல் படத்துக்குத்தான் நான் ரொம்ப வருஷம் போராட வேண்டியிருந்தது. அதுக்கப்புறம் கஷ்டமில்லை. அடுத்த ஆறு மாசத்துலயே ‘தடையறத் தாக்க’ படத்துல கமிட் ஆனேன். இப்போ கலகத் தலைவன் வரப் போகுது.
எனக்குத் தமிழ்ல மட்டுமல்லாமல், தெலுங்கு உள்ளிட்ட வேற மொழிகள்லேயும் நிறைய வாய்ப்புகள் வந்திருக்கு. இந்தக் கலகத் தலைவன் படத்தின் வெளியீட்டுக்கு பின்புதான் அதைப் பற்றி யோசிக்கணும்.
இப்போ நான் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தில் நடிச்சிருக்கேன். அது சீக்கிரம் வெளியாகப் போகுது. ‘ரகளை’ன்ற படத்துல நடிச்சுக்கிட்டிருக்கேன். ஒண்ணுல வில்லன். இன்னொண்ணுல வில்லன் சாயல் இருக்கும். ஆனால் வில்லன் இல்லை. ‘பேச்சுலர்’ பட இயக்குநர் உட்பட இன்னும் நிறைய பேர் நடிக்கக் கேட்டிருக்காங்க. நேரமின்மை காரணமா என்னால நடிக்க முடியலை..” என்றார் இயக்குநர் மகிழ் திருமேனி.