அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிமான்ட்டி காலனி 3’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான முதல் பாகம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதற்கு பிறகு வெளியான 2024ம் ஆண்டு ‘டிமான்ட்டி காலனி 2’ படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், விஜே அர்ச்சனா, மீனாட்சி கோவிந்தராஜன், முத்துக்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த அந்தப் படமும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், இப்படத்தின் மூன்றாம் பாகம் பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
