பொங்கல் வெளியீட்டுக்கு தயாராகும் ‘வேட்டுவம்’

பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வேட்டுவம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளக் காட்சிகள் அடங்கிய புதிய வீடியோவை தீபாவளியை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது. ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் வெளியிடப்பட்ட இந்த வீடியோ தற்போது கவனம் பெற்று வருகிறது.

கேங்ஸ்டர் கதைக்களத்துடன் அறிவியல் புனைவு அம்சங்களையும் இணைத்து இப்படம் உருவாகிறது. அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாகவும், ஆர்யா வில்லனாகவும் நடிக்கின்றனர். சோபிதா துலிபாலா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் அசோக் செல்வன், கலையரசன், லிங்கேஷ் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் ‘வேர்ல்ட் ஆஃப் வேட்டுவம்’ அறிமுக வீடியோ ஏற்கெனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ள இப்படம் 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை இலக்காகக் கொண்டு உருவாகி வருகிறது.

Add a Comment

Leave a Reply