நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள ‘மைசா’ திரைப்படத்தை ரவீந்திர புள்ளே இயக்கியுள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இப்படம் ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
இதில் ஈஸ்வரி ராவ், ராகுல் ரவீந்திரன், சமுத்திரக்கனி, ராவ் ரமேஷ், சிவ கந்துகுரி, கார்த்திக் ரஞ்சினி, தாரக் பொன்னப்பா, நிதி சிங் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வரும் நவம்பர் 27-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் முதல் பாடலான ‘ஓ மைசா ரே’ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தமிழில் விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுதியுள்ள இப்பாடலை குமரா வக்தேவி பாடியுள்ளார்.
