மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’ முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு!

‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற மாரி செல்வராஜ், தொடர்ந்து ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’, ‘பைசன் காளமாடன்’ என பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். தற்போது தனது ஆறாவது படமாக ‘மஞ்சணத்தி’யை இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

மாரி செல்வராஜின் சொந்த தயாரிப்பு நிறுவனமான நவ்வி ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் கதிர், பிரியங்கா மோகன், கயாடு லோஹர், பூர்ணிமா ரவி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கடந்த செப்டம்பர் 7-ம் தேதி தேனியில் படப்பிடிப்பு தொடங்கியது. முன்னதாக மஞ்சணத்தி படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.

குறிப்பாக திருநெல்வேலியில் தொடங்கி காஷ்மீர் வரை செல்லும் கதைக்களத்தில், நான்கு பெண்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருவதாக சொல்லபடுகிறது. இதன் படப்பிடிப்பை 90 நாட்களில் முடிக்கத் திட்டமிட்டுள்ளதாக மாரி செல்வராஜ் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில், படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகப் படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

Add a Comment

Leave a Reply